×

234 இடங்களில் கலைஞரின் முழு உருவச்சிலை

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக திமுக தலைமை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுகவில் உள்ள ஒவ்வொரு அணியினரும் எத்தகைய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும் என்று கட்சி தலைமை வரையறுத்து அதற்கான பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர்கள் மூலம் 234 சட்டமன்ற தொகுதி வாரியாக 234 இடங்களில் கலைஞரின் முழு உருவ சிலைகள் வைக்க இடங்களையும், தேதிகளையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நிகழ்ச்சியின் போது, கலைஞர் 100 என்ற தலைப்பில் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

The post 234 இடங்களில் கலைஞரின் முழு உருவச்சிலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,DMK ,Dinakaran ,
× RELATED பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து...